இலங்கையில் இரண்டாம் சுற்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற போதிலும் இன்னும் அது சமூக மட்டத்திலான பரவலாக மாறவில்லையென விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.
எதிர்வரும் தினங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே இதன் தாக்கம் புலப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் களனி பல்கலை மாணவியொருவர், பன்னல முகாம் மற்றும் நேற்று தம்புள்ள சென்ற இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் அவை யாவும் தொடர்ந்தும் மினுவங்கொட - திவுலபிட்டிய கொத்தனி தொடர்புகள் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment