பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் திவுலபிட்டிய - மினுவங்கொட பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியவாசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அதே போன்று மதுக்கடைகளிலும் மக்கள் முண்டியடித்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்து வந்த குறித்த பெண்ணுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 100 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை அவரோடு தொழில்புரிந்ததாகக் கருதப்படும் 400 பேர் தொடர்பில் அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் தற்போது பாதகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment