சிறைக்கைதிகளுக்கான 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிமித்தம் நேற்றைய தினம் விளக்கமறியல் வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விளக்கமறியல் கைதிகளை கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலேயே அனுமதிப்பதாயினும், கொரோனா சூழ்நிலையின் பின்னணியிலான கட்டாய தனிமைப்படுத்தல் நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரத்யேக சிறையில் மேலதிக பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment