நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளார் சட்டமா அதிபர்.
இப்பின்னணியில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான டி.ஐ.ஜி மற்றும் பிரதான விசாரணையாளர் ஆகியோரை நாளைய தினம் தனது அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக தீவிரவாதிகளுடன் தொடர்பிலுருந்து உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரியாஜ், விடுதலை செய்யப்பட்டிருந்த அதேவேளை அவருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவுமில்லையெனவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment