நாட்டை சரியான பாதையில் நிர்வகிக்கக் கூடிய திறமையான ஜனாதிபதியொருவரின் கைகளைக் கட்டி வைக்க முடியாது என்பதாலேயே தான் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கிறார் டயானா கமகே.
சிறுபான்மை கட்சிகளுடன் முரண்பட்டு, சமகி ஜனபல வேகய அவருக்கு தேசியப்பட்டியலை வழங்கி அழகு பார்த்திருந்த நிலையில் நேற்றைய தினம் அரசின் 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்திருந்தார் டயானா.
இந்நிலையிலேயே, தன்நிலை விளக்கமளித்துள்ள அவர், ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவே தான் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment