வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் ராகம வைத்தியசாலையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பேலியகொடயைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாகவும் நேற்றைய தினமே பி.சி.ஆர் பரிசோதனையூடாக குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் குறித்த நபரைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அதேவேளை பல இடங்களில் கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலை மக்கள் நிராகரிக்கின்ற நிலையில் பொலிஸ் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment