கொலைக்கு 'புனைக்கதை' சோடிப்பு: மதுஷின் சட்டத்தரணி விசனம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 October 2020

கொலைக்கு 'புனைக்கதை' சோடிப்பு: மதுஷின் சட்டத்தரணி விசனம்!

 



பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த ஒரு கைதியை கொலை செய்து விட்டு அதற்கு புனைக்கதை சோடிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் மாகந்துரே மதுஷின் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள.


நேற்றைய தினமே குறித்த சம்பவத்தை 'கொலையென' வர்ணித்து பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அவர் விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக் கைதியொருவரை சட்டவிரோதமாக வெளி நகர்த்தியபோதே தமது தரப்பு சந்தேகித்ததாகவும் மதுஷின் மனைவி இது தொடர்பில் ஒக்டோபர் 17ம் திகதியே கடித மூலம் முறையிட்டிருந்ததாகவும் அதனையும் மீறி திட்டமிட்டு மதுஷ் பொலிசாரால் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த சம்பவம் உடனடியாக கண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை, நாகொடிக் ரங்க என அறியப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்றைய தினமே, ஆண்மையுள்ள பொலிசார் மதுஷை வழியனுப்பி வைத்துள்ளதாக ஆவேசம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment