இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவா அத்தனை பாடு பட்டோம் என்று தம்மை நினைத்து வெட்கப்படுவதாக தெரிவிக்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
இன்று ஆட்சியாளர்களை சுற்றியிருப்பவர்கள் முன்னர் கூறப்பட்டவர்களன்று, முழுக்கவும் இரட்டை நாக்கு கொண்டவர்களும் நயவஞ்சகர்களும் என காரசாரமாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இவர்களால் வீதியிலிறங்கு மக்களுக்கு முகங்கொடுக்க முடியவில்லையெனவும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லையெனவும் தெரிவிக்கிறார்.
அரசாங்கம் என்னதான் மறைத்தாலும் சமூக மட்டத்திலான கொரோனா பரவல் வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment