இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கை மற்றும் ஏற்றுமதி வர்த்தகமும் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கப் போவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு வாத விவாதங்களைத் தோற்றுவித்துள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றில் இது குறித்;து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மருந்து உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இது தொடர்பில் அரசிடம் வினவி வருகின்ற போதிலும் இதுவரை அது முழுமையாக ஆராயப்படவில்லையென விளக்கமளித்துள்ளார்.
கஞ்சா பாவனையால் ஏற்படும் சுகாதார கேடுகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை அவசியப்படுவதாகவும் அது இல்லாது கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி தருவது சர்ச்சையை உருவாக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பல ஆயுர்வேத நிறுவனங்களும் தொடர்ந்தும் இக்கோரிக்கையை முன் வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ஆராயவும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment