கொழும்பில் ரியுசன் வகுப்புகள் நடாத்த தற்காலிக தடை - sonakar.com

Post Top Ad

Sunday, 4 October 2020

கொழும்பில் ரியுசன் வகுப்புகள் நடாத்த தற்காலிக தடை

  


கொழும்பில் ரியுசன் வகுப்புகளை நடாத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து தனியார், சர்வதேச பாடசாலைகளையும் நாளையுடன் மூட உத்தரவிட்டுள்ளது கல்வியமைச்சு.


திவுலபிட்டியவில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாதன் பின்னணியில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை குறித்த பெண் கடந்த 30ம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இப்பின்னணியில், ஒக்டோபர் 5ம் திகதி முதல் நவம்பர் 9ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாந்தவணை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment