நேற்றைய தினம் இலங்கை வருகை தந்திருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை சந்தித்திருந்த போதிலும் பிரதமரை சந்திக்காதமை குறித்து பல்வேறு தரப்பும் கருத்து வெளியிட்டு வருகின்றன.
சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணும் மஹிந்த ராஜபக்சவை பார்ப்பதை பொம்பியோ தவிர்த்துக் கொண்டதாகவும், இதே காரணத்துக்காக மஹிந்த இச்சந்திப்பை தவிர்த்துக் கொண்டதாகவும் இரு தரப்பு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவே அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லையெனவும் சந்திப்பை தவிர்த்துக் கொண்டதாகவும் விமல் வீரவன்ச விளக்கமளிக்கின்றமையும் அமெரிக்க எதிர்ப்பாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் விமல் இவ்விடயத்தில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment