களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல பகுதிகளில் அமுலில் இருக்கும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்குமுகமாக பல இடங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சமூக மட்டத்திலான தொற்று இல்லையென்றே அரசு விளக்கமளித்து வருகிறது.
இந்நிலையில் திங்கள் காலை 6 மணி வரை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த குறித்த பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment