ரியாஜின் விசாரணை தொடர்கிறது: சமல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 October 2020

ரியாஜின் விசாரணை தொடர்கிறது: சமல்!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியதீன் தொடர்பிலான விசாரணை தொடர்வதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சமல் ராஜபக்ச.


ரியாஜ் விடுதலை, சமல் மற்றும் சமல் - ரிசாத் சந்திப்பு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் 20ல் தாம் உடன்படும் விடயங்களும் உண்டென ரிசாத் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில் அரசோடு டீல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.


இந்நிலையிலேயே, இது தொடர்பில் நாடாளுமன்றிலும் இன்று சமகி ஜன பலவேகயவினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கையிலேயே ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment