நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் உடனடி விசாரணை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிலிருந்ததோடு அவர்களுக்கு உதவியதாகவும் முன்னர் பொலிஸ் ஊடக பேச்சாளரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரியாஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென பொலிசார் தற்போது விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ளதுடன் பெரமுன விசாரணை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment