முஸ்லிம் பிரதிநிதிகளுடன் 'நேரடி' தொடர்பிருக்கவில்லை: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 October 2020

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் 'நேரடி' தொடர்பிருக்கவில்லை: மைத்ரி!

 


இலங்கையில் பௌத்த தீவிரவாதத்தை மகாநாயக்கர்களோடு உரையாடி கட்டுப்படுத்த முடிந்ததாகவும் முஸ்லிம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுடன் தனக்கு நேரடி தொடர்பு இருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலெயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், வெளிநாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடுகளால் பெரும்பாலான நடவடிக்கைகள் வலுவற்றுப் போனதாகவும் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்குத் தான் யாருக்கும் 'தடை' விதிக்கவில்லையென மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தான் அறிவுறுத்தியதாகவும் விளக்கமளித்துள்ளார்.


பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு வந்தாலும் கூட தனது இரண்டு கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்துவதைத் தவிர பூஜித வேறு எதுவும் செய்யவுமில்லை, தன்னை மதிக்கவும் இல்லையென்பதால் இவ்வாறு கூறியதாகவும் பூஜிதவின் செயற்பாடு தொடர்பில் ரணிலிடம் முறையிட்டதன் பின்னணியில் ரணில், மலிக் மற்றும் தலதா முன்னிலையில் பூஜித அழைத்து விசாரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment