முன்னாள் பொலிஸ் பேச்சாளர், எஸ்.எஸ்.பி ஜாலிய சேனாரத்னவை ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னணியில் இடமாற்றம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜியின் தனிப்பட்ட உதவியாளராக ஜாலிய காங்கேசன்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரியாஜ் பதியுதீனைக் கைது செய்த பின்னர், அவருக்கு தற்கொலைதாரிகளுடன் தொடர்பிருந்ததாகவும், குறித்த நபர் நிதியுதவிகளை செய்ததாகவும் தெரிவித்திருந்த ஜாலிய, விடுதலையின் பின் நடவடிக்கையெடுக்க போதிய சாட்சியங்கள் இல்லையென தெரிவித்திருந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு தற்போது இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment