திவுலபிட்டிய, மினுவங்கொடயைத் தொடர்ந்து வெயங்கொடயிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணோடு தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணியும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30ம் திகதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திவுலபிட்டிய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை நேற்றிரவு கண்டறியப்பட்டு, இன்று பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment