ஆளுங்கட்சி நாடாளுமன்றில் தமது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது ஏழு வாக்குகளை பல கோடிகள் செலவு செய்து விலைக்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் நளின் பண்டார.
20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததில் ஏழு பேர் எதிர்க்கட்சியினர் என்ற அடிப்படையில், அரசுக்கு 149 வாக்குகளே இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய ஏழு பேருக்கும் அரசு கோடிகளை வாரியிறைத்திருப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து சற்று முன் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேகயவிலிருந்து ஏழு வாக்குகளை அரசு பெற்றுக் கொண்ட அதேவேளை அதில் அறுவர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment