ரிசாத் பதியுதீன் - ராஜபக்ச குடும்பத்தினரிடையே மீண்டும் நல்லுறவு வளர்ந்துள்ளதுடன் 20ம் திருத்தச் சட்டத்துக்கு அவரது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அதனூடாக அரசில் இணைந்து கொள்ளும் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த ரிசாதின் சகோதரன் விடுவிக்கப்பட்டமை இதனை மேலும் வலுப்படுத்தியுள்ள நிலையில் பெரமுன உறுப்பினர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தாலும் கூட ரிசாத் தொடர்பில் வேறு பிரச்சினைகளும் இருப்பதனால் அவரை ஆளுங்கட்சியில் இணைத்துக் கொள்வதைத் தான் விரும்பவில்லையென கெஹலிய ரம்புக்வெல, நேற்றைய தினம் வவுனியாவில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment