கோரானா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் நலம் பெற தனது பிரார்த்தனைச் செய்தியை அனுப்பியுள்ளார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவரது பாரியாரும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில், ட்ரம்பின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நலமாகவே இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டு வரும் அதேவேளை, ட்ரம்ப் ரைவஸ் தாக்கத்திலிருந்து மீளும் நிலையில் இல்லையென ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment