சிலாபம் பகுதியில் 17 வயது பாடசாலை மாணவன் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிலாபம் நகர்ப்பகுதியில் இயங்கும் பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கடந்த வார இறுதியில் கம்பஹாவில் டியுசன் வகுப்பொன்றுக்கு சென்று வந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் குடும்பம் மற்றும் தொடர்பிலிருந்தவர்களை விசாரித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment