ரிசாதின் சகோதரனுக்கு எதிராக சாட்சியில்லை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Friday, 2 October 2020

ரிசாதின் சகோதரனுக்கு எதிராக சாட்சியில்லை: பொலிஸ்

 


ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் உதவி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரனுக்கு எதிராக வழக்குத் தொடர போதிய சாட்சியமில்லையென்கிறது பொலிஸ்.


விசாரணையின் போது தாக்குதலுடன் தொடர்பிருப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் அதன் பின்னணியில் ரியாஜுக்கு எதிராக வழக்கெதுவும் தொடரப்படவில்லையெனவும் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கிறார்.


முன்னர், குறித்த நபர் தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவியதாகவும் இதே பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Abdul said...

இங்கு ரிஷாட் அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா என்பது கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும் ஏனனில் அவரின் சகோதரை நீண்ட நாளுகளுக்கு பிறகு விடுதலை செய்து இருக்கின்றார்கள்,என்னுடைய கருத்து என்னவென்றால் அவரை மிரட்டி நிபந்தனையின் அடிப்படையில் தான் விடுதலை செய்து இருக்கிறார்கள் எங்களோடு அரசோடு சேறு இல்லையென்றால் தம்பி மீது இன்னும் பொய் குற்றம்சாட்டுகளை போட்டு சாதகாலமும் சிறையில் தான் வைப்போம் அல்லது கொலை செய்வோம் என்ற சாதிநிபந்தனை அடிப்படையில் தான் அவரை அரசோடு சேர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.(ராஜபக்ச சகோதரர்களை இலகுவாக நம்ப கூடாது )

Post a Comment