கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை நிலையங்களில் மேலதிக கட்டில்களின் தேவைகள் உருவாகியுள்ளது.
தற்சமயம், 1800 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை புதிய கட்டில்கள் அவசியப்படுவதனால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
13 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமையும் மினுவங்கொடயிலிருந்து ஆரம்பித்த இரண்டாவது சுற்று பரவல் உள்நாட்டில் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் முதலாவது நபர் கண்டறியப்பட முன்பதாகவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இருந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment