ரியாஜ் விடுதலை: கார்டினல் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Saturday, 3 October 2020

ரியாஜ் விடுதலை: கார்டினல் அதிருப்தி!

 


ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு வெளியில் அரசினால் விடுவிக்கப்படுவது தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.


கடந்த காலங்களில் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜின் கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்து வந்த கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றமை பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அரசியல் டீல் ஒன்று இடம்பெறுவதாக சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றமை கார்டினல் மேலும் தெரிவிக்கிறார்.


ரியாஜ் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென தற்போது தெரிவிக்கும் பொலிஸ் பேச்சாளர் இதற்கு முன்னர் குறித்த நபர் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாகவும் தெரிவித்திருந்தமையை கார்டினல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment