தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சியைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.
இப்பின்னணியில், தமது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளைப் பயன்படுத்தி வாக்காளர்களை ஏற்றிச் சென்று, அதனூடாக பொது நிதிக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment