கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிமித்தம் இன்றும் நாளையும் பூட்டப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் நாடாளுமன்ற ஊழியர்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் புதிய பாதுகாப்பு அணியொன்று கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் முன்னர் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் ஏனைய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் அனைத்து நடவடிக்கைகளும் மீள ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment