பொத்துவில்: பள்ளிவாசல்களையும் மூடி வைக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Sunday, 25 October 2020

பொத்துவில்: பள்ளிவாசல்களையும் மூடி வைக்க உத்தரவு




பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,   அவர்கள் வசித்துவரும் கிராம சேவகர் பிரிவுகள் நேற்று (24)ம் திகதி மாலை முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.


பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, மீன் மற்றும் மரக்கறி சந்தை ஆகியன பொத்துவில் பிரேதேச ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்துள்ள பொது மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐவேளை மற்றும்  ஜும்மா தொழுகைகளை பள்ளிவாயல்களில் நிறை வேற்றுவதும் இன்று (25) அஸர் தொழுகை முதல் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் உறவைப் பேணி வந்த 18 நபர்களிடம் இருந்து PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பொத்துவில் சுகாதார வைத்தியர் Dr. AU சமட் தலைமையிலானா குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. இன்றும் (25) சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிடம் இருந்து PCR பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட உள்ளதாக பொத்துவில் சுகாதார வைத்தியப் பணிமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் அல்லது அவர்களது உறவினர்களுடன்  தொடர்புகளை பேணியவர்கள் இருப்பின், தமது கிராம சேவகரிடம் அல்லது பொத்துவில் பொலீஸ் நிலயத்தில் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களிடதில்  தெரிவிக்குமாறு வேண்டப் படுகின்றனர்.


-இர்ஷாத் ஜமால் 

No comments:

Post a Comment