டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த பிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் 'சிக்கி' பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மாளிகாவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் மீட்புக்காக மதுஷையும் அழைத்துச் சென்றதாகவும் இதன் போது அங்கு பாதாள உலக பேர்வழிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது மதுஷ் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரண்டு பொலிசார் 'காயப்பட்டு' வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 22 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் இரு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மதுஷிடம் தகவல் பெற்று பெருந்தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment