கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை இன்று காலை தெஹிவளையில் கைது செய்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவரிடமான அடிப்படை விசாரணைகள் நிறைவுற்றதும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல இ.போ.ச பேருந்துகளை பாவித்ததன் ஊடாக அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக ரிசாத் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை ஏலவே தனது கைதைத் தவிர்ப்பதற்கு அவர் சார்பில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வழக்கின் விசாரணை நாளை 20ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment