ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய சஹ்ரான் குழுவினர் பாணந்துறையில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் முதற்தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது, இணையத்தளத்தில் வாடகைக்கு வீடிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைக் கொண்டே தம்மை ஒரு நபர் அணுகியதாகவும், மனைவி பிள்ளைகளுடன் இருப்பதற்கே வீட்டை வாடகைக்கு பெறுவதாகக் கூறியிருந்ததாகவும் அதனடிப்படையில் பெப்ரவரி 13ம் திகதி ஒப்பந்தமிட்டு வீட்டைக் கொடுத்ததாகவும் வீட்டு உரிமையாளர் இல்ஹாம் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, தன்னிடம் வீட்டை வாடகைக்குப் பெற்ற நபர் தாக்குதல்தாரிகளுள் ஒருவர் என்பதையும் புகைப்படத்தினைக் கொண்டு அவர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment