தனது உறவுக்காரர்களுக்கெல்லாம் முடிந்தளவு அரச வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடும்பத்தார், நெருங்கியவர்களுக்கு சலுகையடிப்படையில் பதவிகளை வழங்கக் கூடாது எனும் ஜனாதிபதியின் 'வெளியில்' சொல்லப்பட்ட விதிமுறையை மீறி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவுக்காரர்களுக்கே தன்னைச் சுற்றியுள்ள வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக சபாநாயகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவரது சகோதரர் வசந்த யாப்பா பிரத்யேக செயலாளராகவும், இன்னுமொரு சகோதரர் சரத் யாப்பா ஊடக தொடர்பாளராகவும்,மேலுமொரு சகோதரரான சம்ப யாப்பா மேலதிக செயலாளராகவும், மைத்துனர் மக்கள் தொடர்பாளராகவும் ஏலவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஐவரை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரத்தையும் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment