கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் சிறைச்சாலைகளுக்கு விருந்தினர் வருகை தடுக்கப்பட்டுள்ளதால் சிறைக்கைதிகள் தம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு உரையாட தொலைபேசி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உறவினர்கள் இலவசமாக தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இத்தொலைபேசி இலக்கம் தரப்பட்டிருப்பதாகவும் இன்னும் ஒரு மாத காலத்துக்கு இவ்வசதி வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிக்கிறார்.
இம்மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததன் பின்னணியில் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் விருந்தினர் வருகை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment