இலங்கையின் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்வதற்கு பெருந்தொகை பணம் செலவு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இவ்வாறு கொடிகளை இறக்குமதி செய்வதற்கு பெருந்தொகை பணம் செலவாவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையிலேயே அவற்றை தரமாக உற்பத்தி செய்யலாம் என அமைச்சர் எடுத்துரைத்துள்ளதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பெரமுன ஆதரவாளர்கள் தேசியக் கொடியில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் இருப்பதை எதிர்த்தும் கருத்துகள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment