இலங்கையில் மாடறுப்புத் தடையைக் கொண்டுவருவதன் பின்னணியில் பாரிய அளவில் வெளிநாடொன்றிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் வர்த்தக நோக்கமே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலான சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தமது ஆட்சிக்காலத்தில் முக்கிய வர்த்தக நடவடிக்கைகளை குடும்ப ஆளுமைக்குள் கொண்டு வருவதன் வழக்கத்தில் மாட்டிறைச்சி இறக்குமதி வர்த்தகத்தை நாமல் ராஜபக்சவின் மாமனார் திலக் வீரசிங்க கையகப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அதனை மறுத்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனது மனைவியின் தந்தையான வீரசிங்கவுக்கும் இதற்கும் தொடர்பில்லையென தெரிவிக்கிறார்.
ஏலவே நாமலின் மாமனாரும், ரோஹிதவின் மாமியாரும் விமான மற்றும் விமான நிலைய சேவைகளுக்கான அரசின் நிறுவனத்தில் உயர் பதவிகளை பெற்றுள்ளதாக சர்ச்சை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment