சீனாவை நம்பி ஏமாந்து விடாதீர்கள்: பொம்பியோ - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 October 2020

சீனாவை நம்பி ஏமாந்து விடாதீர்கள்: பொம்பியோ

 



இலங்கை நிலையான அபிவிருத்தியை அடைவதும், மக்கள் சுபீட்சமான வாழ்வை வாழ்வதுமே எப்போதும் அமெரிக்காவின் எண்ணம் என தெரிவிக்கின்ற அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, சீனாவுக்கு மறைமுகமான கெட்ட எண்ணங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.


உலகின் தலை சிறந்த அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதுடன் நாட்டின் சட்ட திட்டங்களையும் மதித்து அபிவிருத்திக்கான நிலையான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் சீனா அவ்வாறின்றி, கடன் வலைக்குள் நாடுகளை தள்ளி விட்டு சட்டவிரோதமான முறையல் இறையான்மைக்குள் தலையீடு செய்யும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment