பதுளை, பெலவத்தை போதிராஜாராம விகாரையின் பிக்கு ஒருவர் மீது நேற்று மாலை பிரதேச வாசியொருவர் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னணியில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு பொலிசார் தலையிட்டுள்ளனர்.
வடிகான் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திபெத்திய பிக்குவான சிகின் அமரஜோதி தேரர் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடாத்திய நபரின் வீட்டின் மீது கல்வீசி, பொலிசார் வரும் வரை வீட்டில் சிறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment