குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்ய முனைவதைத் தவிர்க்கும் நோக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலிக்க நவம்பவர் 6ம் திகதியை ஒதுக்கியுள்ளது நீதிமன்றம்.
எனினும், நேற்றைய தினம் ஏலவே ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவருக்கு உதவியவர்களையும் சேர்த்து அனைவருக்கும் ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்து அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை அவரது தரப்பு அதனை நிராகரித்துள்ளதுடன் கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment