ஆறு தினங்களுக்குப் பின் தலைமறைவாக இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை இன்று காலை தெஹிவளையில் கைது செய்துள்ள பொலிசார் அவர் தங்குவதற்கு இடமளித்து உதவி செய்த இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தெஹிவனை, எபனெசிர் மாவத்தை அடுக்கு மாடி குடியிருப்புத் தொகுதியிலேயே ரிசாத் ஒளிந்திருந்ததாகவும் இன்று காலை கைது செய்துள்ளதாகவும் முன்னர் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவருக்கு தங்குமிடம் வழங்கிய மருத்துவர் மற்றும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்ற பொலிசார் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment