மாகந்துரே மதுஷிடமான விசாரணையின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிககள் பற்றி அறியக் கிடைத்துள்ளதாக பொலிசாரே தெரிவிக்கும் நிலையில், குறித்த நபரைக் கொன்றிருப்பது அவர்களது பெயர்கள் வெளிவராமல் தடுப்பதற்கே என தெரிவிக்கிறார் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
போதைப் பொருள் மீட்புக்காக சென்றிருந்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிக்கி மதுஷ் இறந்து விட்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ள போதிலும் அது சோடிக்கப்பட்டது எனவும் மதுஷ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அரசியல் மட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஜனவரி மாத இறுதியில் வானொலி நிகழ்ச்சியொன்றிலும் இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் அரசியல்வாதிகள் தொடர்பு பற்றி மதுஷ் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் அவ்வாறான ஒரு முக்கிய சாட்சியை கொன்றிருக்கும் விதம் பல கேள்விகளை உருவாக்கியிருப்பதாகவும் விஜித மேலும் விளக்கமளித்துள்ளமையும் நேற்றைய தினம் 'ஆண்மையுள்ள' பொலிசார் மதுஷை வழியனுப்பி வைத்துள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment