மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிடம் நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிNசோதனைகள் இன்றும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 150 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட அல்லது தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணு வதளபதி.
நேற்று வரை 1034 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு பெரும்பாலானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொடர்புள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment