20ம் திருத்தச் சட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வரும் நிலையில் நாளையும் மறு தினமும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நாடாளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.
சபாநாயகர் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்ததையடுத்து சுகாதார அமைச்சு மற்றும் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
27ம் திகதி விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீனை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக நீர் கொழும்பு அனுப்பியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment