சமகி ஜன பல வேகயவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து தன்னை அரசோடு இணைத்துக் கொள்ள முயற்சி செய்து வரும் டயானா கமகே, தனக்கு பெண்கள் - சிறுவர் தொடர்பிலான அமைச்சொன்று இருந்தால் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக 'ஆசையை' வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியிலிருந்து 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 'சன்மானங்கள்' ஏலவே பேசித் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் எம்.பிக்கள் தமக்குப் பதவிகள் கிடைக்காது என்பதில் தெளிவாக இருப்பதனால் அது மாற்று வழியில் அமைந்திருக்கும் என சமூகத்தில் நம்பிக்கை நிலவுகிறது.
இதேவேளை, ஆளுங்கட்சியிலிருந்தே வாக்களிப்பதற்குப் பேரம் பேசிய நபர்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமையும் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment