பாரிய அளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னணியில் இம்முறை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் சுமார் 9,945 பரிசோதனை முடிவுகள் தேங்கியிருப்பதாகவும் அவற்றின் முடிவுகளை விரைவாக வெளியிட முயற்சி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மாத்திரம் 4500 மாதிரிகளும், ஐ.டி.எச்சில் 1800, கராபிட்டிய 2145, மற்றும் அநுராதபுர வைத்தியசாலையில் 1500 சோதனை மாதிரிகளும் இவ்வாறு தேங்கியிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment