எக்ஸ்போ லங்கா ஊழியர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் தகுந்த முறைப்படி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
'வெளியிலிருந்தே' கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள குறித்த நபர்கள் வெ வ்வேறு அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் எனவும் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெருமளவு பி.சி. ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து ஒத்துழைப்பு நல்கி வருவதாக நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment