மினுவங்கொட கொத்தனியிலிருந்து மேலும் 609 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையோடு தொடர்புடையவர்கள் எனவும் 48 பேர் ஆடைத்தொழிற்சாலையுடனும் மற்றும் பேருவளை மீன்பிடித்துறைமுகத்தோடு தொடர்புடைய 20 பேரும் காலி மீன்பிடித் துறைமுகத்தோடு தொடர்புடைய ஐவரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில், மினுவங்கொட கொத்தனியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3426 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment