சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான இரண்டு டைட்டன் வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் களுத்துறை பொலிசார்.
இமதுவ, கோட்டாகொட பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இக்கைது இடம்பெற்றதாகவும் கைதானவர்கள் ஹற்றன் மற்றும் பாணந்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களுள் விமானப்படை சிப்பாய் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment