நேற்று மாத்திரம் 5600க்கும் அதிகமான PCR பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Thursday, 8 October 2020

நேற்று மாத்திரம் 5600க்கும் அதிகமான PCR பரிசோதனை

 


நேற்றைய தினம் மாத்திரம் இலங்கையில் 5608 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் ஒரே தினத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிக பரிசோதனை எண்ணிக்கையாகும்.


கடந்த பெப்ரவரி முதல் இதுவரை 309,989 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தற்போதைய மினுவங்கொட கொரோனா பரவலின் பின்னணியில் அதிகளவான பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தனியில் தொடர்புள்ளவர்கள் தயங்காது தனிமைப்படலுக்கு முன் வருமாறு இராணுவ தளபதி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment