இலங்கையில் கொரோனா தொற்றின் பின்னணியில் 35,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 4ம் திகதி திவுலபிட்டியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டதன் பின்னணியில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இப்பின்னணியில் தற்சமயம் 4464 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இம்மாதத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்சமயம் 35,000 பேர் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் மார்ச் மாதம் முதல் 185,000 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment