அரசின் உத்தேச 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நேர்ந்ததே கோட்டாபே ராஜபக்சவுக்கும் நேரும் என எச்சரித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.
அரசியலமைப்புக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சரத்துகள் கோட்டாபே ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக இருந்தும் மைத்ரியின் கைகள் கட்டப்பட்டிருந்தது போன்றே நிறைவேற்று அதிகாரம் இருந்தும் கோட்டாபே ராஜபக்ச பொம்மையாக்கப்படுவார் என விஜேதாச விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment