அரசின் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு முன்னராக அதிலுள்ள குறைபாடுகள் பல நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச.
இப்பின்னணியில் உத்தேச திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்கி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், முறையான மாற்றங்கள் உள்வாங்கப்படாவிட்டால், பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் தாம் 20ஐ ஆதரிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வ அதிகாரங்களையும் பெறும் கோட்டாபே ராஜபக்சவினால் நாட்டுக்கு தீங்கு ஏற்படாது என்று வைத்துக் கொண்டாலும், எதிர்காலத்தில் வரும் ஒருவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது எனவும் அதற்கேற்ப சிந்தித்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment